குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா வருத்தத்துடன் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது . இந்த சீசனில் குக்குகளாக பவித்ரலட்சுமி ,சகிலா, கனி ,பாபா பாஸ்கர், மதுரை முத்து, தர்ஷா குப்தா, அஸ்வின் ,தீபா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் . மேலும் புகழ், பாலா ,சிவாங்கி, மணிமேகலை, சரத் உள்ளிட்ட பலர் கோமாளிகளாக வருகின்றனர் . இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள புகழ் மற்றும் பவித்ரா இடையே இருக்கும் காமெடி கலந்த காதல் பார்ப்பவர்களை கவரும் வண்ணம் உள்ளது . இவர்கள் ஒரே அணியில் இருந்தாலும் அல்லது வெவ்வேறு அணியில் இருந்தாலும் இவர்கள் செய்யும் ரகளைகளுக்கு அளவே இல்லை .
This is my only twitter handle pic.twitter.com/BWBKIbFTs4
— pavithralakshmi (@itspavitralaksh) January 21, 2021
இந்நிலையில் பவித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வருத்தத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் அவர் பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பதாகவும் , ட்விட்டரில் ஆக்டிவாக இல்லை என்றும் கூறியுள்ளார் . ஆனால் இதை சாதகமாக பயன்படுத்தி சிலர் தன்னுடைய பெயரில் போலியான ட்விட்டர் பக்கங்களை உருவாகியுள்ளதாகவும் அந்த போலி பக்கங்களில் உள்ள எந்த பதிவிற்கும் தான் பொறுப்பு அல்ல என்பதையும் தெரிவித்துள்ளார். மேலும் பவித்ரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.