குக் வித் கோமாளி பிரபலம் புகழுக்கு பிரபல நடிகர் ஒருவர் பரிசளித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் வெற்றி பெற்றதையடுத்து தற்போது இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கும், கோமாளிகளுக்கும் தற்போது படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது . அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வரும் புகழுக்கு பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
தற்போது பிரபல நடிகர் சந்தானம் நடித்து வரும் படத்தில் புகழ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . இந்நிலையில் புகழ் தனது யூடியூப் சேனலில் நடிகர் சந்தானத்தை சந்தித்தது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார் . அதில் புகழ் வாங்கிய புதிய காரில் அவருடன் சென்ற சந்தானம் காரில் வைப்பதற்கு வெள்ளி விநாயகரை பரிசாக கொடுத்துள்ளார் .