குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகியாக அறிமுகமானவர் சிவாங்கி. இதைதொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார் . தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் கோமாளியாக கலந்துகொண்டு கலக்கி வருகிறார் . இதில் இவருடைய சுட்டித்தனமான பேச்சும் அஸ்வினுடன் இவர் செய்யும் ரகளைகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .
சமீபத்தில் சிவாங்கியின் குடும்ப புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது . இந்நிலையில் சிவாங்கி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .