Categories
சினிமா தமிழ் சினிமா

‘குக் வித் கோமாளி’ வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த நடிகை… வேற லெவலில் வைரலாகும் புரோமோ…!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் முறையாக வைல்ட் கார்டு என்ட்ரியாக சீரியல் நடிகை ஒருவர் நுழைந்துள்ளார் .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது . இந்த சீசனில் குக்குகளாக சகிலா ,பாபா பாஸ்கர் ,அஸ்வின், பவித்ர லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பாலா ,மணிமேகலை ,புகழ் சிவாங்கி உள்ளிட்ட பல காமெடி பிரபலங்கள் கோமாளிகளாக வருகின்றனர் .

wildcard contestant in cooku with comali குக் வித் கோமாளி வரலாற்றில் முதல் முறையா

இந்த நிகழ்ச்சியில்  போட்டியாளர்கள் கோமாளிகளை  வைத்துக்கொண்டு சமைப்பதற்கு படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது . இந்நிலையில் இதுவரை இல்லாத புதிய மாற்றமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக சீரியல் நடிகை ரித்திகா நுழைந்துள்ளார் . செம கலாட்டாவாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |