குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் ? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது 2வது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் மதுரை முத்து , தீபா , தர்ஷா குப்தா ,சகிலா ,பாபா பாஸ்கர் மாஸ்டர் ,அஸ்வின், கனி, பவித்ரா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர் . இதுவரை நடந்த போட்டியில் மதுரை முத்து ,தீபா ,தர்ஷா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினர்.
தற்போது இறுதிப் போட்டியை நோக்கி நகர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் அஸ்வின், கனி ,பவித்ரா, சகிலா, பாபா பாஸ்கர் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சிக்கான புரோமோவில் பவித்ரா மற்றும் அஸ்வின் இருவரும் எலிமினேஷன் டாஸ்க்கில் நிற்கின்றனர். இதனால் அஸ்வின் மற்றும் பவித்ரா ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இருவரும் இதுவரை சிறப்பாக விளையாடி வந்த நிலையில் இவர்களில் யார் வெளியேறுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.