குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறிய பவித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது . தற்போது இறுதிப் போட்டியை நோக்கி நகர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் ,சகிலா ,அஸ்வின், கனி, பவித்ரா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
https://twitter.com/pavithralaksh_/status/1370971546991267845
இந்நிலையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பவித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘இது ஒரு அற்புதமான பயணம். எனக்கு இதுவரை அன்பும் ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் நன்றி . குக் வித் கோமாளி டீமில் உள்ள அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.