‘வலிமை’ படத்தில் குக் வித் கோமாளி புகழ் நடித்துள்ள காட்சியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.
சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விசில் தீம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ”வலிமை” படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் குக் வித் கோமாளி புகழ் குறிப்பிட்ட காட்சியில் நடித்துள்ளார். அவர் நடிகர் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.