அஷ்வினின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் அஸ்வின். இவர் தற்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ள திரைப்படம் ”என்ன சொல்ல போகிறாய்”. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் அவர் 40 கதைகளை கேட்டு தூங்கியதாக சொன்னதை தற்போது வரை சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில், இவரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் அடுத்த படத்தை இயக்குனர் பிரபு சாலமன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.