Categories
தேசிய செய்திகள்

“ஆட்டோவில் குக்கர் வெடி விபத்து”….. குமரி மாவட்த்தை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு?…. தமிழகத்தில் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை…‌!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் நேற்று முன்தினம் ஓடும் ஆட்டோவில் திடீரென குக்கர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து பயங்கரவாத தாக்குதல் என்று கர்நாடகா போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்த ஆட்டோ வெடி விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் மங்களூரில் நடைபெற்றது பயங்கரவாத தாக்குதல் என்று தெரிந்ததால் தமிழக எல்லைகளில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற வெடி விபத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்ததாக கூறி ஊட்டியை சேர்ந்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதனையடுத்து தற்போது கர்நாடக போலீசார் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

அதாவது குமரி  மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ஆட்டோ வெடி விபத்து  சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறி அவரிடம் விசாரணை நடத்துவதற்காக கர்நாடக போலீசார் தமிழகம் வந்ந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கோயம்புத்தூரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கார் வெடி விபத்து சம்பவம் நடந்த நிலையில் தற்போது மங்களூரில், ஆட்டோ வெடி விபத்து நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |