Categories
அரசியல் மாநில செய்திகள்

“சுயேட்சைகளுக்கு குக்கர்” சிக்கி தவிக்கும் அமமுக வேட்பாளர்கள்…..!!

அமமுக வேட்பாளர்களின் பெயரைருடன் கூடிய சுயேச்சை வேட்பாளர்களுக்கு 4 தொகுதிகளில் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

R.K  நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். இதனையடுத்து நடைபெற உள்ள மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பொதுச் சின்னமாக குக்கர் சின்னத்தை அமமுக வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். உச்சநீதிமன்றம் வரை சென்ற டிடிவி தினகரனின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதேசமயம் அமமுகவிற்கு பரிசுப்பெட்டி சின்னத்தை பொதுச் சின்னம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அமமுக வேட்பாளர்கள் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியெடுக்கின்றனர். மேலும் அமமுக வேட்பாளர்களின் பெயரை போல போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் 4 பேருக்கு   குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சுயேட்சைகளுக்கு குக்கர் க்கான பட முடிவு

சட்டப்பேரவை தொகுதிகளான திருவாரூர், பாப்பிரெட்டிபட்டி, கரூர், சாத்தூர் ஆகிய இடைத் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களின் பெயரை போல  சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.இந்த சுயேச்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. டிடிவி தினகரன் அமமுகவிற்கு குக்கர் சின்னம் கேட்டபோது தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கவில்லை. ஆனால் தற்போது அமமுக வேட்பாளர்களின் பெயரை போல களமிறங்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.இதனால் தேர்தலில் வாக்களிக்கும்போது வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படலாம் என குற்றசாட்டு முன்வைக்கப்படுகின்றது.

Categories

Tech |