பனீர் வெஜ் கிரேவி
தேவையான பொருட்கள்
பனீர் – 300 கிராம்
வெங்காயம் – 2
பீன்ஸ் – 10
தேங்காய் – 1 மூடி
மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி
வத்தல் பொடி – 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
பட்டை – 2
கேரட் – 1
கரம் மசாலா பொடி – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் பீன்ஸ் கேரட்டை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளியை நீள நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
- பனீரை சதுர வடிவில் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை போட்டு பனீரையும் சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் ஒரு பக்கம் வெங்காயத்தையும் மறுபக்கம் பீன்ஸ் கேரட்டையும் போட்டு வதக்கவும்.
- நன்றாக வதங்கியதும் வத்தல் பொடி, மஞ்சள் பொடி, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும்.
- பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கிளறி கரம் மசாலா தூள் போட்டு கொத்தமல்லி இலை போட்டு வேகவைக்கவும்.
- வெந்ததும் தேங்காய் அரைத்து பால் எடுத்து அதில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கி விடலாம்.