சமையல் டிப்ஸ்
நன்றாகக் கொதிக்கும் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் எலுமிச்சை பழங்களைப் போட்டு மூடி 10 நிமிடங்கள் கழித்து எடுத்து, நறுக்கி ஊறுகாய் போட்டால், மறுநாளே சாப்பிட முடியும் .
அதிரசம் செய்யும்போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் சுவையாக இருக்கும்.
பனீர் பொரிக்கும்போது, எண்ணெயில் சிறிதளவு உப்பு சேர்த்தால் சீராகப் பொரியும். கருகாது.
இட்லிக்கு உளுந்துக்குப் பதிலாக மொச்சை பயன்படுத்தலாம். அதிக ஊட்டச் சத்து கிடைக்கும்.