சமையல் டிப்ஸ்
உருளைக் கிழங்கு வறுவல் செய்யும்போது, சிறிது பயத்த மாவைத் தூவி, பின் பொறித்தெடுத்தால் வறுவல் மொறுமொறுப்பாக இருக்கும்.
போளிக்கு பூரணம் செய்யும்போது, அது நீர்த்துவிட்டால், அடுப்பில் வைத்து, சிறிது நெய் ஊற்றிக் கிளறினால் கெட்டியாகிவிடும்.
ரசத்துக்கான பொருட்களை பொடி பண்ணும்போதே, சிறிது கடுகு சேர்த்துக்கொண்டால், தெளிந்த ரசம் கிடைக்கும்.
அவல் பொரியை வெறும் கடாயில் வறுத்து, பிறகு பாகில் போட்டு பொரி உருண்டை பிடித்தால் பொரி உருண்டை மொறுமொறுப்பாக இருக்கும்.
பாகற்காய் பொரியல் செய்யும்போது சிறிது கேரட், வெங்காயம் துருவிப் போட்டு நிறைய கறிவேப்பிலை சேர்த்தால், கசப்பே தெரியாது.