ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்லத்துரையும் அதே பகுதியில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இதனையடுத்து தனது வீட்டில் இருந்த சிறுமி திடீரென காணாமல் போய் விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ய முயன்ற குற்றத்திற்காக செல்லதுரையை கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.