Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த சிறுமி…. தொழிலாளி செய்த வேலை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த இந்த சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான கோட்டையன் என்பவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார். இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் கோட்டையனை  தட்டி கேட்டுள்ளார்.

அப்போது கோட்டையன் சிறுமியின் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கோட்டையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |