சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜா பேட்டை பகுதியில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன்ராஜை சக தொழிலாளர்களான காளி, பகவதி ராஜ் மற்றும் குமார் ஆகியோர் மது அருந்திவிட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் மோகன் ராஜ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.