கூலித் தொழிலாளியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லாம்பாளையம் பகுதியில் கோபால் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகின்றார். இந்நிலையில் கோபால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை முன்பு நின்று கொண்டிருந்த போது அவரது நண்பர் சுதாகர் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சுதாகர் கோபாலிடம் பணம் கேட்டு தகராறு செய்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோபாலை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த கோபாலை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய சுதாகரை வலைவீசி தேடி வருகின்றனர்.