Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதுக்காக தான் வாங்கினேன்… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாததால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வையம்பாளையம் பகுதியில் செந்தில்குமார் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணமாகாத செந்தில்குமாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து செந்தில்குமார் சிகிச்சை பெறுவதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடன் தொகையை அவரால் திருப்பி செலுத்த இயலாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் செந்தில்குமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கோவில்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |