மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் பகுதியில் கந்தசாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் கந்தசாமி தனது சொந்த வேலை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து இவர் திப்பணபள்ளி கூட்டு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வேகமாக சென்ற வேன் எதிர்பாராதவிதமாக இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.