Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முந்தி செல்ல முயன்ற போது… கோர விபத்தில் பறிபோன உயிர்… கிருஷ்ணகிரியில் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பலையூர் கினியன் பள்ளம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக சக்திவேல் ஓசூர் சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சக்திவேல் தின்னூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் வேகமாக வந்த சரக்கு வேன் இவரது மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயற்சி செய்துள்ளது.

அப்போது எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த சரக்கு வேன் சக்திவேலின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வேன் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ராயக்கோட்டை காவல் நிலையத்தில் சக்திவேலின் மனைவி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான சரக்கு வேன் ஓட்டுநர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |