கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொகரப்பள்ளி பகுதியில் செல்வம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வம் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து திடீரென செல்வம் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
அதன் பின் மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் செல்வம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.