Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மரத்திலிருந்து விழுந்த கணவர்… பதறி சத்தம் போட்ட மனைவி… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

பனை மரத்திலிருந்து கீழே விழுந்ததால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சொக்கன் குடியிருப்பு கிராமத்தில் சிலுவை தாசன் என்ற பனை ஏறும் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா ஜெயராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சிலுவை தாசன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் குத்தகை அடிப்படையில் பனை மரங்களில் ஏறி பதநீர் இறக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது சித்ரா ராணியும் தனது கணவருக்கு உதவியாக சென்றுள்ளார்.

இதனையடுத்து பனை மரத்தில் ஏறிய சிலுவை தாசன் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஜெயராணி அக்கம்பக்கத்தினர் உதவியோடு படுகாயமடைந்த அவரை மீட்டு திசையன்விளை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிலுவை தாசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தட்டார்மடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |