Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாமியார் மீது தாக்குதல்…. போதையில் இருந்த தொழிலாளி…. போலீஸ் நடவடிக்கை…!!

மாமியாரை தாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதியில் தையல்நாயகி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகளான வினிதா என்பவர் அவரது கணவர் நேசமணியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்க்கும் நேசமணிக்கும், வினிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாமியார் வீட்டிற்கு சென்ற நேசமணி குடும்ப பிரச்சினை குறித்து பேசும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கோபமடைந்த நேசமணி தையல் நாயகியை கல்லால் அடித்துள்ளார். மேலும் மது போதையில் இருந்த நேசமணி உடைந்த பாட்டிலால் தன் உடலில் தானே குத்தி கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நேசமணியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |