சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டநாயகனஅள்ளி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் முடி திருத்தும் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சக்திவேல் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதற்கு சக்திவேலின் தந்தை செல்வம் மற்றும் தாய் வசந்தி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இது குறித்து அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ரேணுகா மகளிர் காவல் நிலையத்தில் சக்திவேல் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சக்திவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் வசந்தி மற்றும் செல்வம் ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.