மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திகிலர்பேட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ஜெகதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இந்நிலையில் ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஜூஜூவாடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஜெகதீஷின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகதீஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.