2-வது மாடியில் இருந்து தவறி கிழே விழுந்த கட்டுமான தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பாடி ஜெகதாம்பிகை நகரில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இனா முல்ஹக் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திருமலைவாசன் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பணி நடந்து வருகின்றது. அங்கு 2-வது மாடியில் இனா முல்ஹக் துளையிடும் பணியில் ஈடுபட்டு கொண்டுஇருந்தார் .
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டார். இதில் பலத்த காயமடைந்த இனாமுல் ஹக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இனாமுல் ஹக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.