மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள காடையம்பட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து வாகைகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற அரசு பேருந்து ரமேஷ் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் ரமேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று ரமேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.