Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

1 ஆண்டுக்கு முன்பு நடந்த விபத்து…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பகுதியில் கூலித் தொழிலாளியான அழகர்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு விபத்தில் காயமடைந்த அழகர்சாமிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் தனது பெற்றோர் வீட்டிற்கு தூங்க சென்ற அழகர்சாமி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.

இதனால் அவரது குடும்பத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அழகர்சமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகர்சாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |