மின்சாரம் தாக்கியதால் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவந்தாகுளம் பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தகுமார் கம்பிரசர் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ள இரும்பு குழாயை எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.