Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருக்கும் போது… உயிருக்கு போராடிய தொழிலாளி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆத்தெரத்தான் கொட்டாய் என்ற பகுதியில் அமைந்துள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயகிருஷ்ணா எந்திரத்தின் மூலம் கிரானைட் கற்களை வெட்டி துண்டாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயகிருஷ்ணா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |