Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கொஞ்ச வேலையா போனாரு… தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள கன்னிவடுகபட்டி பகுதியில் ரங்கசாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் ரங்கசாமி சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு கன்னிவடுக பட்டி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து அவ்வழியாக வேகமாக சென்ற கார் ரங்கசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ரங்கசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |