Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பரிடம் கேட்ட மனைவி….. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நவமலை பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மருதம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் காளியப்பன் தனது நண்பரான முத்துப்பாண்டி என்பவருடன் குட்டையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் முத்துப்பாண்டி மட்டுமே வீடு திரும்பியதால் காளியப்பன் குறித்து அவரது மனைவி கேட்டுள்ளார். அதற்கு காளியப்பன் வரவில்லை என்று முத்துப்பாண்டி கூறியுள்ளார்.

இதனையடுத்து காளியப்பன் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது குட்டையின் கரையோரம் அவர் அணிந்திருந்த செருப்பு மற்றும் வேஷ்டி இருந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காளியப்பனின் சடலத்தை மீட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் காளியப்பனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மது அருந்திவிட்டு முத்துப்பாண்டியும், காளியப்பனும் மீன் பிடிப்பதற்காக சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மதுபோதையில் காளியப்பன் ஆழமான பகுதிக்கு சென்றதால் முத்துப்பாண்டி அவரை எச்சரித்துள்ளார். ஆனாலும் அதனை கேட்காமல் காளியப்பன் ஆழமான பகுதிக்கு சென்றதால் முத்துப்பாண்டி அங்கிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பின் குட்டையில் மூழ்கி காளியப்பன் இறந்தது காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |