கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜனபெண்டா பகுதியில் கூலி தொழிலாளியான கிருஷ்ணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணப்பா தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கிருஷ்ணப்பா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணப்பா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.