கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் மதன் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மதன் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது மன உளைச்சலில் இருந்த மதன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மதனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.