வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள அய்யாபுரம் பகுதியில் சங்கிலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கிலி அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வயலில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனை அடுத்து சங்கிலி வயலில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை எடுக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கிலியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.