Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… திடீரென விழுந்த தண்டவாள கம்பி… தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…!!

வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ரயில் தண்டவாள கம்பி சரிந்து விழுந்ததால் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜாக்கள் மங்கலம் நம்பி ஆற்றுப்பாலம் பக்கத்தில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தண்டவாளங்களில் வெல்டிங் செய்யும் பணியில் தீபக் என்ற கூலி தொழிலாளி ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பாலத்தின் சுவரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தண்டவாளகம்பி தீபக்கின் மீது விழுந்து விட்டது. இதனால் படுகாயமடைந்த தீபக்கை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தீபக் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |