Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கு…. கைது செய்யப்பட்ட சகோதரர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

தொழிலாளி கொலை வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மின்வாரிய சாலை டவுன் ஸ்டேஷன் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் இவரது சகோதரரான பாபு என்பவரும் தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். மேலும் அதே தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த விஜயராம் மற்றும் அவரது சகோதரரான ராம்தேவ் போன்றோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும், விஜயராமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர் பாபு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயராம் மற்றும் அவரது சகோதரரான ராம்தேவ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |