கூலி தொழிலாளியை மர்ம நபர் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தங்கி கண்ணன் என்பவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 29-ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் கண்ணனை ஓட ஓட விரட்டி சென்று தலையில் பலமாக கட்டையால் அடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கமலக்கண்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கூலி தொழிலாளியை கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.