Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூலி தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் ஜாபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சில்வர் பட்டறையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஜாபரை சிலர் அடித்து கொலை செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜாபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த  காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது 3 பேர் இரும்பு கம்பியால் ஜாபரை அடித்துக் கொலை செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து ஜாபரை அடித்துக் கொலை செய்த குற்றத்திற்காக மகேஷ், செல்வம், சரவணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து நடத்திய விசாரணையில் ஜாபர் முன்விரோதம் காரணமாக அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |