Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவியை பற்றி அவதூறு பேசிய பெண்… அடித்து கொல்லப்பட்ட கணவர்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

கூலித்தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிவபெருமான் பாளையம் பகுதியில் ஐயப்பன் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு நதியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஐயப்பனின் உறவினரான சரவணன் என்பவருடைய மனைவி விஜயகுமாரி நதியாவை பற்றி தவறாக ஐயப்பனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து நதியாவிடம் இதுகுறித்து ஐயப்பன் கேட்டதால் கோபத்தில் அவர் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஐயப்பன் தனது மனைவியை பற்றி தவறாக பேசிய விஜயகுமாரியை தாக்கியுள்ளார்.

அதன்பின் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து விக்கிரவாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஐயப்பனை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஐயப்பனை கண்டுபிடித்த சரவணன், அவரது தம்பி சரத்குமார், அவருடைய அக்கா ஜானகி மற்றும் ஜானகியின் கணவர் குமாரவேல் போன்றோர் இணைந்து உருட்டுக்கட்டையால் ஐயப்பனை தாக்கியுள்ளனர்.

அதன்பின் அவருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் ஐய்யப்பன் பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் நதியா புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரத்குமார், சரவணன், ஜானகி, குமரவேல் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |