Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நான் அடிச்சதுனால செத்துட்டாங்களா….? தவறுதலாக நினைத்த தொழிலாளி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குடிபோதையில் தாக்கியதால் சித்தி இறந்து விட்டதாக நினைத்த வெல்டிங் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கரிச்சிபாளையம் பகுதியில் ரங்கராஜ் என்ற வெல்டிங் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரங்கராஜன் தனது குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து ரங்கராஜனின் சித்தி ராஜம்மாள் என்பவர் மதுபோதையில் இருந்த ரங்கராஜனை கண்டித்துள்ளார். அப்போது கோபமடைந்த அவர் குடிபோதையில் தனது சித்தி ராஜம்மாளை கல்லால் தாக்கியுள்ளார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் மயங்கிய நிலையில் கிடந்த ராஜம்மாளை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தனது சித்தி உயிரிழந்து விட்டதாக நினைத்த ரங்கராஜன் குடிபோதையில் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் ரங்கராஜனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |