கூலித்தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்தவியல் மொக்கை மேடு பகுதியில் மல்லான் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உடலில் ரத்த காயங்களுடன் மல்லான் நடுரோட்டில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக சிறுமுகை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் இணைந்து கூலி தொழிலாளியை அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் யார் என்றும், எதற்காக மல்லானை கொலை செய்துள்ளனர் என்ற காரணம் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.