குடிபோதையில் வடமாநில தொழிலாளியை நண்பர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திகாம்பர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ராஜ் பகதூர் சிங் மற்றும் குமார் சிங் போன்றோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வாடகைக்கு ஒரு அறை எடுத்து தங்கி தினமும் பணிக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் அறையில் மது குடித்துக் கொண்டிருக்கும் போது திகாம்பருக்கும், ராஜ்பகதூருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த ராஜ்பகதூர் திகாம்பரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து குமார் சிங்கை தொடர்பு கொண்ட ராஜ்பகதூர் திகாம்பரை இரும்பு கம்பியால் அடித்து விட்டேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த திகாம்பரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜ் பகதூரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.