Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அம்மா அவன் தான் காரணம்” மிரட்டிய கூலி தொழிலாளி… போக்சோவில் தள்ளிய தாய்…!!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் லோகநாதன் என்பவர் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் லோகநாதனுக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து லோகநாதன் அந்தப்பெண்ணின் மகளான 14 வயது சிறுமியுடன் பேசி வந்துள்ளார். அதன்பின் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை லோகநாதன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுமியை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளார்.

  1. அப்போது அந்த சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது அந்தப் பெண்ணிற்கு தெரியவந்துள்ளது. அந்த சிறுமியிடம் இதுகுறித்து கேட்டபோது லோகநாதன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாயார் ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக லோகநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |