வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாததால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பனையபுரம் பகுதியில் கலியமூர்த்தி என்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடனாக பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் வாங்கிய பணத்தை கலியமூர்த்தியால் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கடன் தொகையை கேட்டதால் மன உளைச்சலில் இருந்த கலியமூர்த்தி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கலியமூர்த்தி இறந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த விக்ரவாண்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.