Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிணற்றில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கூலித்தொழிலாளி திருமணமாகாத ஏக்கத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மான் பூங்கா சாலை அருகே இருக்கும் ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு சுமார் 20 அடி ஆழ கிணற்றில் இருந்து இறந்தவரின் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ஊட்டியில் வசித்த கூலி தொழிலாளியான பிரபு என்பது தெரியவந்துள்ளது.  இந்நிலையில் திருமணமாகாத விரக்தியில் பிரபு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |