Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாய் ஆடுகளை கடித்ததில் தகராறு…. கூலி தொழிலாளிக்கு நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

நாய் ஆடுகளை கடித்ததால் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் நாய் வளர்த்து வந்தார். இவரது நாய் அக்கம்பக்கத்தில் வளர்த்து வந்த ஆடுகளை கடித்ததால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியில் வசிக்கும் சிலர் கடந்த 13-ஆம் தேதி மாரியப்பனின் வீட்டிற்குள் நுழைந்து தகறாரில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தகராறு முற்றவே மாரியப்பனை அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாரியப்பனை உறவினர்கள் உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாரியப்பன்பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மாரியப்பனின் உறவினர்கள் மானூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்டியபெரி பகுதியில் வசிக்கும் முத்து, முத்து மணி மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |