கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக ரவிச்சந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன் அருகிலுள்ள வயலுக்கு சென்று அங்கு விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ரவிச்சந்திரனை உடனடியாக மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.