வியாபாரி மின் வாரிய துறை அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கெஜலட்சுமி பகுதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் முன்பக்கத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். தற்போது அந்த கடையை காலி செய்துவிட்டு கடை மின் இணைப்பை வீட்டு மின் இணைப்பாக மாற்றி தரக்கோரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார்.
இதற்காக 118 ரூபாய் பணம் கட்டணமாக மின்வாரிய துறைக்கு கட்டியுள்ளார். ஆனால் மின்வாரியத் துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வேலாயுதம் மின்வாரிய அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்ததும் அதிகாரிகள் வேலாயுதத்துடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பின்பு வேலாயுதம் தனது போராட்டத்தை கைவிட்டு சென்றுள்ளார்.