ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையில் பொது வழியில் வாகனங்களை ஓட்டிச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு உத்தரவையும் மீறி ஒரு சில பகுதிகளில் மக்கள் பொது வழியில் நடமாடி வந்தனர். மதுரையில் உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிந்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி எச்சரித்து அனுப்பினர்.